பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்


ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்


புத்ராஜெயா, 10 அக்டோபர்- தொழில்நுட்பத்தின் வழி ஆசிரியர்களின் தரத்தையும் திறனையும் மேம்படுத்த கல்வித் திட்டத்தில் புதிய திட்டங்கள் தீட்டப்படவுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். வழக்கமான பழைய பாடத்திட்டங்களை அமல்படுத்துவதோடு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு கற்றுத் தருவதன் வழி மலேசிய கல்வித் தரத்தை உயர்த்த முடியும் என பிரதமர் மேலும் கூறினார்.
ஒவ்வொரு பாடத்திலும் சிறந்த ஆசிரியர்களைத்  தேர்ந்தெடுத்து அவர்களை மற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும் முன் உதாரணமாகவும் நியமிக்க உள்ளதாகவும் பிரதமர் கூறினார். இத்திட்டத்தை துணை பிரதமர் தான் ஸ்ரீ முகிதின் யாசினும் ஒத்துக் கொண்டுவிட்டதாக அவர் மேலும் தமது உரையில் எடுத்துரைத்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல வியாபாரிகளும் பொது மக்களும் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். அதுபோல் இந்த தொழில்நுட்பத்தைப் பள்ளிகளில் ஆசிரியர்களும் பயன்படுத்தி தங்களை முன்னேற்றிக் கொள்வதோடு மாணவர்களின் கல்வித் தரத்தையும் முன்னேற்ற இது வழிவகுக்கும் என பிரதமர் கூறினார்.
அமெரிக்காவில் இணையம் வழி விரிவுரையாளர்கள் பாடங்களை போதிப்பதன் வழி ஒரே நேரத்தில் 100,000 முதல் 150,000 மாணவர்கள் வரை  கல்விக் கற்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். இது போல் நமது நாட்டிலும் கல்வித்துறையில் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்தி ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக