பக்கங்கள்

சனி, 24 நவம்பர், 2012

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்


மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“நான் அரசியல்வாதி என்ற முறையில் மட்டுமின்றி ஒரு கணவர், ஒரு தந்தை என்ற முறையிலும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். மகளிருக்கு எதிரான வன்முறைகள் பல வடிவங்களில் உள்ளன. எதனையும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் நேசிக்கும் பெண்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய தேவையானதைச் செய்வோம் என நாம் இன்று உறுதி எடுப்போம்,” என நஜிப் தமது சத்து மலேசியா வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
“மகளிருக்கு எதிரான வன்முறைகளை போக்குவோம்” என்னும் தலைப்பைக் கொண்ட அந்த வலைப்பதிவு, நாளை அனுசரிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை துடைத்தொழிப்பதற்கான ஐநா அனைத்துலக தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைகள் என வரும் போது மலேசியா பல வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் மேலும் சொன்னார். தொழிலாளர் ரீதியிலும் அரசாங்கத்திலும் சம நிலையை உறுதி செய்வதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும் நஜிப் சொன்னார்.
“நாடு முழுவதும் மலேசியர்கள் நமது சமூகத்தைப் பாதுகாப்பானதாகவும் மென்மேலும் சம நிலையாகவும் திகழ்வதற்குப் பாடுபட்டு வருகின்றனர்,” என்றார் அவர்.
“முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் குடும்ப வன்முறைகள், பாலியல் அச்சுறுத்தல், பாலியல் வன்முறைகள் ஆகியவை இன்னும் நிகழ்கின்றன. அவை தலைப்புச் செய்திகளாகவும் இடம் பெறுகின்றன.”
2008க்கும் 2012 மே மாதத்திற்கும் இடையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 8,653 பேருக்கு வழி காட்டுதலை மகளிர் மேம்பாட்டுத் துறை வழங்கியுள்ளது என நஜிப் மேலும் தெரிவித்தார்.
“அந்தப் பிரச்னைகளை பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களுடைய குடும்பங்களோ சமாளிப்பதற்கு விட்டு விட முடியாது, விட்டு விடக் கூடாது என நான் நம்புகிறேன். அனைத்து குடிமக்களுடைய பாதுகாப்பு,  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தார்மீக கடமையாகும். அதனை அலட்சியம் செய்யக் கூடாது.
” இப்போது ஏற்றுக் கொள்ளக் கூடாத   நிலையில் உள்ள மகளிருக்கு எதிரான வன்முறைகளைக் குறைக்க என்னால் முடிந்ததைச் செய்வேன் எனப் பிரதமர், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில்நான் வாக்குறுதி அளிக்கிறேன்,” என அவர் வலியுறுத்தினார்

..semparuthi. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக