பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்



நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6- ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள 50 முக்கிய நகரங்களில் 80,000 வாங்கும் வசதிகொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான இணைய விண்ணப்ப தொடக்க விழா எதிர்வரும் சனிக்கிழமை பினாங்கு மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது.

தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, RM 10 பில்லியன் செலவில் எதிர்வரும் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் வீடுகளை வாங்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
“ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் பதிந்துக்கொள்ளும் முதல் வாய்ப்பு பினாங்கு வாழ் மக்களுக்குக் கிடைத்துள்ளதாக” PR1MA பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டத்தோ முத்தாலிப் அலியாஸ் நேற்று நடைபெற்ற ஒரு விளக்கமளிப்பு கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  
“PR1MA 50,000 வீடுகளைக் கட்டும் வேளையில், மீதம் 30,000 வீடுகளை PR1MA பெர்ஹாட் நிறுவனம் தனியார் குத்தகை நிறுவனங்களுடன் இணைந்து நிர்மாணிக்கும். நகர்ப்புறத்தில் வாழும் நடுத்தர மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வாங்கும் வசதி கொண்ட வீடுகளை நாங்கள் கட்டித்தர உள்ளோம்” என்றார் அவர்.
தனிநபரோ அல்லது, திருமணமான தம்பதிகள் கூட்டு வருமானம் ரி.ம 2500க்கும்- ரிம 7000க்குள் இருந்தால் அவர்கள் PR1MA வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படவிருக்கும் தரை அல்லது அடுக்குமாடி வீடுகள் அனைத்தும் RM 100,000 முதல் RM 400,000 ரிங்கிட் வரை விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக