கோலாலம்பூர் ஜாலான் செமாராக்கில் உள்ள பெல்டா தலைமையகக் கட்டிடத்தின் காவற்காரர்கள் நுழைவாயிலைத் திறக்க மறுத்ததுடன் பெல்டா தலைவர் ஈசா சமாட்-டிடம் மகஜரைச் சமர்பிக்க அவர்களை அனுமதிக்கவும் இல்லை.
“மலேசியர்களை அவர்கள் நடத்துவது இந்த வழியில் தான். பெல்டா அவர்களுடைய பெற்றோர்களுக்குச் சொந்தமானது என்பதைப் போல அவர்கள் இயங்குகின்றனர்,” என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.
இன்றைய ஆர்ப்பாட்டம் பற்றி தொலைநகல் வழியாகவும் மின் அஞ்சல் வழியாகவும் பெல்டாவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு விட்டதாக பெல்டா குடியேற்றக்காரர்களுடைய உரிமைகளுக்குப் போராடும் அனாக் என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் கூறினார்.
பெல்டா துணை நிறுவனமான Felda Iffco Oil Products Sdn Bhd சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒர் யூத நிறுவனத்துக்கு சுத்திகரிக்கப்படாத செம்பனை எண்ணெயை விற்பதின் மூலம் யூதப் போராட்டத்துக்கு உதவி வருவதாக அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது என மஸ்லான் தெரிவித்தார்.
யூத நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை விற்க பெல்டாவை அனுமதித்ததின் வழி அரசாங்கம் ‘இஸ்ரேலுடன் ஒத்துழைக்கிறது,” என்றார் அவர்.
“யூத நிறுவனங்களுடனான வர்த்தகத்தை நிராகரிப்பதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் மலேசியாவிடமிருந்து செம்பனை எண்ணெயை வாங்க பல நாடுகள் தயாராக இருக்கின்றன.”
‘இஸ்ரேலுடனான மலேசியாவின் ரகசிய உறவுகள்’ அரசாங்கத்தின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்றும் மஸ்லான் குறிப்பிட்டார்.
இன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் பாதிப்பேர் பல்க்லைக்கழக மாணவர்கள் ஆவர். சிலர் கோலாலம்பூருக்கு வெளியில் இருந்து வந்தவர்கள்.
அவர்கள் ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அணி வகுத்துச் சென்றனர்.
semparuthi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக