பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்



கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 3 டிசம்பர்- கடந்த ஏப்ரல் மாதம் வரை நாட்டில் மொத்தம் 241, 740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் டத்தோ டோனல்ட் லிம் சியாங் சாய் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து  52,917 சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும், 42,843 சம்பவங்கள் கூட்டரசு பிரதேசத்திலும்,
நிகழ்ந்துள்ளது. இவர்களில் 70% ஆண்கள், மற்றவர்கள் பெண்களாவர்.
கார் கடனுதவியைத் திரும்பச் செலுத்தாத காரணத்தாலேயே மொத்தம் 25. 21 விழுக்காட்டினரும், சொந்த கடனுதவி 13.15 விழுக்காட்டினரும், வீட்டுக்கடனுதவி 12.31 விழுக்காட்டினரும்,  வணிக  நோக்கத்திற்காக கடனுதவி பெற்ற 11.26 விழுக்காட்டினரும் கடன்பற்று அட்டைக்காக 4.9 விழுக்காட்டினரும்  திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
 அண்மையில், 1967-ஆம் ஆண்டு திவால் சட்டம் மறு செய்யப்படும் என பிரதமர் அறிவித்தார். திவால் சட்டம் மிகவும் கடுமையாக இருப்பதால் மக்களின் சுமையை அதிகரிக்கிறது. எனவே தக்க நேரத்தில் நாட்டின் திவால் சட்டம் மறு ஆய்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது என்றார் அவர்.

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக