ஷா ஆலம், 19
அக்டோபர்-நேற்று மாலை ஷா ஆலம் செக்சன் 7-இல் மறுசீரமைப்புக்குட்படுத்தப்பட்டிருந்த
பங்களா வீட்டின் கான்கிரிட்ப் கூரை சரிந்ததில் 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறை
உறுதிபடுத்தியுள்ளது.
தொடக்கமாக
இச்சம்பவத்தில் மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்குக் தகவல் கிடைத்ததாக
ஷா ஆலம் மாவட்ட போலீஸ் படைத்தலைவர் ஏ.சி.பி சாஹடி அயொப் தெரிவித்தார். ஆனால்,
அதற்குப் பின் மீட்புப் பணியின் போது மீட்கப் பட்ட பாதிக்கப்பட்ட சுப்பார்டி என்ற
தொழிலாளர் சம்பவத்தின் போது 6 பேர் மட்டுமே வேலை செய்ததாகத் தெரிவித்தார்.
ஆகக்
கடைசியாக இரவு 10.15 மணியளவில் மீட்கப்பட்ட காஸ்முஜி என்ற தொழிலாளர் சிகிச்சைக்காக
சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று மாலை
நிகழ்ந்த அச்சம்பவத்தில், தோதோக் மொசாமாட் அந்தோணி என்ற ஆடவர் இடிபாடுகளில் சிக்கி
பலியானார். மாலை 6.24 மணியளவில் அவரின் சடலம் மீட்கப்பட்டு, கிள்ளான் துங்கு
அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக