பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

கே.டி.எம் மற்றும் தீயணைப்புப் படை இணைந்து தயாரிக்கும் பயணிகள் பாதுகாப்பு திட்டம்
கே.டி.எம் மற்றும் தீயணைப்புப் படை இணைந்து தயாரிக்கும் பயணிகள் பாதுகாப்பு திட்டம்
கோலாலம்பூர், 10 அக்டோபர்- பயணிகளின் பாதுகாப்பு கருதி நாட்டின் ரயில் சேவை நிலையமும் தீயணைப்பு நிலையமும் புதிய பாதுகாப்புத் திட்டத்தை வரையவுள்ளது, பயணத்தின் போது தீ, விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகள் எளிய முறையில் தங்களை தற்காத்துக் கொள்ள பல பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ரயில் சேவை மையத்தின் துணை தலைவர் எல்.தி கோல் சர்பினி திஜான் தெரிவித்தார்.
நாட்டில் தினமும்  ஏறக்குறைய 100,000 மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்குப் பயணத்தின் போது ஆபத்திலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு அம்சங்கள் கற்றுத்தரப்படுமானால் பயணிகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பர் என் அவர் மேலும் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் 15 ரயில் சேவை மையங்களுக்குத் Teman Pili Bomba எனும் சான்றிதல் வழங்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக