கோலாலம்பூர், அக்டோபர் 8- அரசாங்க மருத்துவமனையை நம்பி
வரும் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தாலும்,
டையலிசிஸ் சிகிச்சைக்கான உதவித் தொகையை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு
அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார துணை அமைச்சர் டத்தோ ரோஸ்னா அப்துல் ரஷிட்
ஷிர்லின் தெரிவித்தார்.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல், குறைந்த வசதி மற்றும்
வறுமைகோட்டிற்குக் கீழ் வாழும் சிறுநீரக நோயாளிகளுக்கு டையலிசிஸ் சிகிச்சைக்கான
உதவித்தொகையை அரசாங்கம் அளித்து வந்தது. இதன்வழி அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தி
வரும் டையலிசிஸ் மையங்களில் நோயாலிகள் ஒருமுறை 50 ரிங்கிட் மட்டும் செலுத்தி
சிகிச்சை பெற்று வந்தனர்.
“அவ்வகையில், இதுவரை, 29,937 நோயாளிகள்
RM208.70மில்லியன் மதிப்பிலான டையலிசிஸ் சிகிச்சைகயைப் பெற்றுள்ளனர்” என இன்று
மக்களவையில் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி. ராமசாமி (ஜ.செ.க)
எழுப்பிய கேள்விக்கு டத்தோ ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின் இவ்வாறு பதிலளித்தார்.
முன்னதாக, பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையில்,
சிறுநீரக நோயாளிகளின் டைலசிஸ் சிகிச்சைக்கான உதவித்தொகையை அரசாங்கம் அதிகரிக்குமா
என டாக்டர் பி.ராமசாமி கேள்வியெழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக