பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

இணையம் வழியாகவும் இனி பொதுமக்கள் உடல் உறுப்புதானம் செய்யலாம்



இணையம் வழியாகவும் இனி பொதுமக்கள் உடல் உறுப்புதானம் செய்யலாம்

கோலாலம்பூர், 15 அக்டோபர்- பொதுமக்கள் இனி இணைய  அகப்பக்கம்
மூலமாக உடல் உறுப்பு தான பிரமாண பாரத்தைப் பூர்த்தி செய்யலாம். “A Gift For Life” என்ற அகப்பக்கம் வாயிலாக மக்கள் இனி தேவைப்படுவோருக்கு உடல் உறுப்பு தானம் செய்யலாம்.
சம்பந்தப்பட்ட அந்த அகப்பக்க நிர்வாகக் குழுவினர் நமது பாரங்களைப் பரிசீலித்தப் பின் உடல் உறுப்பு தானம் செய்வதற்கான பிரமாண அட்டை நமது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியாவ் தியோங் லாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நாங்கள் தற்போது உடல் உறுப்பு தானம் செய்யும் சமூகத்தை, குறிப்பாக, இந்நாட்டில் 70% மக்கள் தொகையைப் பிரதிநிதிக்கும் இளைஞர்கள் மத்தியில் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்”.
“உடல் உறுப்பு தானம் செய்வதற்கான பாரத்தை இணையம் வழியாகப் பூர்த்தி செய்வது மூலம், பொதுமக்களை உடல் உறுப்பு தானம் செய்வதற்கு ஊக்குவிப்பதன்  மூலம், அதிகமான உயிர்களைக் காப்பாற்ற இயலும் என இங்கு தேசிய இருதய அறுவை சிகிச்சைக் கழகத்தில் ஒருவாரத்திற்கு நடைபெற்று வரும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாமைத் திறந்து வைத்த போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த மாதம் வரை, நாட்டில் மொத்தம் 15,611 நோயாளிகள் மாற்று உடல் உறுப்புக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

vanakkammalaysia.  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக