பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

லீ சோங் வேய்க்கு சொந்தமான நிறுவனத்தில் கொள்ளைலீ சோங் வேய்க்கு சொந்தமான நிறுவனத்தில் கொள்ளை

கோலாலம்பூர், 15 அக்டோபர்- நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டளரான
லீ சோங் வேய்க்குச் சொந்தமான நிறுவனத்தில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பூச்சோங், பண்டார் புத்ரியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்தை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 7 ஆப்பள் ரக கணினிகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
முன்னதாக, இன்று காலை 9 மணியளவில், Chong Wei Bina Jaya Sdn Bhd என்ற அந்த நிறுவனத்தை, லீ சோங் வேய்-யின் பணியாளர் ஒருவர் திறக்க முற்பட்ட போது, அந்தக் கொள்ளைச் சம்பவம் அம்பலமானது.
“திருடர்கள் நிறுவனத்தின் முன் கதவை உடைத்து நுழைந்துள்ளனர். மூன்று மாடி கடை வீட்டில் அமைந்திருந்த அந்த நிறுவனத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில், பல முக்கிய கோப்புகளும், தாள்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது” என அப்பணியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும், லீ சோங் வேய் ஆல் இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் போது விளையாடி வெற்றி பெற்ற பூப்பந்து மட்டையைத் திருடர்கள் களவாடமல் விட்டுச் சென்றது தமக்கு திருப்தியளிப்பதாக சோங் ஹூன் என்ற அந்த பணியாளர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த பூப்பந்து மட்டை RM 74,000 ரிங்கிட்டுக்கு ஏலத்திற்கு விடப்பட்டு, அந்த தொகை ஜப்பான் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிநிதியாக வழங்கப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.

vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக