பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

சிசுக்கள் விற்பனை அதிகரிப்பதற்கு குழந்தையின்மையே காரணம்




சிசுக்கள் விற்பனை அதிகரிப்பதற்கு குழந்தையின்மையே காரணம்


கோலாலம்பூர், 10 அக்டோபர்- குழந்தை பாக்கியம்  இல்லாத காரணத்தினால் வளர்ப்பு பிள்ளைகளைப் பெற விரும்பும் சில பெற்றோர்களால் தான் நாட்டில் அதிகமாக சிசு விற்றல், கடத்தல் போன்ற வியாபாரங்கள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழ்மை நிலை, குடும்ப கஷ்டம், கடன் பிரச்சனை, திருமணத்திற்கு முன் திருமணம் புரிவது போன்ற காரணங்கள் தான் அதிகமாக சிசுக்கள் விற்கப்படுவதாக மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஹெங் சேய் கீ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 11 சிசுக்கள் விற்பனை நடந்துள்ளதாகவும்,  இந்த எண்ணிக்கை ஒவ்வொராண்டும் அதிகரித்தவண்ணமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்தக் குற்றச் செயலை தடுக்க, வளர்ப்பு பிள்ளைகளைப் பெற விரும்பும் பெற்றோர்கள் அரசாங்கம் ஏற்படுத்திருக்கும் இணையச் சேவை வழி விண்ணப்பிக்கலாம் 


vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக