பக்கங்கள்

திங்கள், 15 அக்டோபர், 2012

மக்களவை: PR1MA வீடுகள் கட்டுவதற்கான நிலங்கள் அடையாளம் காணப்படுகின்றன




மக்களவை: PR1MA வீடுகள் கட்டுவதற்கான நிலங்கள் அடையாளம் காணப்படுகின்றன

கோலாலம்பூர், 15 அக்டோபர்-கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில்
அடுத்தாண்டு ஏறக்குறைய 50,000 வாங்கும் சக்தி வீடுகளை நிர்மாணிக்கும் வகையில் அரசாங்கத்திற்குச் சொந்தமான சில மேம்படுத்தப்படாத நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குறிப்பாக சுங்கை பூலோ, காஜாங், செமிஞ்சே ஆகிய பகுதிகளில் 300,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ எஸ்.கே தேவமணி இன்று மக்களவையில் தெரிவித்தார்.
நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வருமானம் பெறும் மக்களின் பிரச்சனைகளையும், வீடமைப்புத் தேவைகளையும் அரசாங்கம் நன்கு அறிந்து வைத்துள்ளது.
“அரசாங்கமும் தேசிய வீடமைப்பு நிறுவனம் மற்றும் ஒரே மலேசியா மக்கள் நலத்திட்டக் குழு (PR1MA) இணைந்து அடுத்தாண்டுக்குள் வாங்கும் சக்தி கொண்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிலங்களை அடையாளம் கண்டு வருகிறது”.
துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் போன்ற நவீனமய பெருந்திட்டங்களுக்காக அரசாங்க நிலங்கள் பயன்படுத்தப்படும் என்றாலும், மக்கள் அது குறித்து அச்சமடையத் தேவையில்லை. ஏனெனில், நடுத்தர வருமானம் பெறுபவர்கள் சொந்த வீடு வாங்குவதற்கான தேவையை அரசாங்கம் நிச்சயமாக நிறைவேற்றும்” என கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் (பாஸ் கட்சி) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் டத்தோ எஸ்.கே தேவமணி இவ்வாறு குறிப்பிட்டார். 

vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக