பக்கங்கள்

புதன், 17 அக்டோபர், 2012

ஒரே மலேசியா கழிவு அட்டை விரிவுபடுத்தப்படலாம்- மக்களவையில் தகவல்ஒரே மலேசியா கழிவு அட்டை விரிவுபடுத்தப்படலாம்- மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், அக்டொபர் 16- தனியார் மற்றும் உயர்க்கல்விக்கூடங்களில் பயிலும்
மூன்று பிரிவு மாணவர்களுக்கும் இரண்டாவது கட்ட ஒரே மலேசியா மாணவர் கழிவு அட்டை(KADS1M) வழங்குவது குறித்து அரசாங்கம் சீர்தூக்கி பார்க்கும் என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பகுதி நேர மாணவர்கள், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் என இம்மூன்று பிரிவினருக்கும் இக்கழிவு அட்டை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை துணையமைச்சர் டத்தோ ரொஹானி அப்துல் காரிம் தெரிவித்தார்.
முதல் கட்டமாக இவ்வாண்டு ஜூலை 2-ஆம் தேதி, இந்நாட்டில் பொது மற்றும் தனியார் உயர்க்கல்விக்கூடங்களில் முழுநேரமாகப் பயிலும் மாணவர்களுக்கு ஒரே மலேசியா மாணவர் கழிவு அட்டையை அமைச்சு வழங்கியது.
“இதனைத் தொடர்ந்து, இந்த கழிவு அட்டை திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படவேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, வெளிநாடுகளில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இந்த ஒரே மலேசியா கழிவு அட்டை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும். இதன் மூலம் விடுமுறையின் போது நாடு திரும்பும் மாணவர்கள் அதனை இங்கு பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களின் பொருளாதார சிக்கலைக் குறைக்க முடியும்”  என இன்று மக்களவையில் ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது அசிஸ் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ரொஹானி அப்துல் காரிம் இவ்வாறு பதிலளித்தார். 
vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக