பக்கங்கள்

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வளர்ச்சியடைந்த நாடாக உருவாக “Malaysian Way” கொள்கை தொடரும்-பிரதமர்



வளர்ச்சியடைந்த நாடாக உருவாக  “Malaysian Way” கொள்கை தொடரும்-பிரதமர்


குவாந்தான், 8 அக்டோபர்- 2020-ஆம் ஆண்டுவாக்கில் மலேசியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் வகையில் முன்னாள் தலைவர்கள் பின்பற்றிய அமல்படுத்திய “Malaysian Way” கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.

அக்கொள்கையானது மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தியுள்ளதோடு, உலகிலேயே இன நல்லிணக்கத்தைப் போற்றும் ஒப்பற்ற நாடாக திகழ செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
“Malaysian Way” கொள்கை மற்ற நாடுகளைவிட சற்று வேறுபாடு கொண்டது. அவ்வகையில் முன்னாள் தலைவர்கள் நாட்டில் பல்லின மக்களிடையே இனம், கலாச்சாரம், மதம் மற்றும் கல்வியை மேலோங்கச் செய்வதில் வெற்றிகண்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் குவாந்தானில் பகாங் மாநில சீன சங்களின் சம்மேளனத்தின் 27-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு பேசினார். 

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக