பக்கங்கள்

புதன், 17 அக்டோபர், 2012

சீனர்கள் தேசிய மொழியில் புலமைப் பெற வேண்டும்- பிரதமர் வலியுறுத்து



சீனர்கள் தேசிய மொழியில் புலமைப் பெற வேண்டும்- பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர் 17- மலாய் மொழி நமது தேசிய மொழி என்பதால்
சீனர்கள் அம்மொழியில் புலமைப் பெற்றிருப்பது அவசியம் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று வலியுறுத்தினார்.
அதேவேளையில் தேசிய கல்வி திட்டத்தின் கீழ் தரமான கல்வியை வழங்கும் வகையில் சீனமொழிக்கல்வியும் புறக்கணிக்கப்படாது என இன்று சீன வானொலி ஒலியலையான மெலடி எப்.எம்-க்கு வழங்கிய சிறப்புப் பேட்டியின் போது உத்தரவாதம் அளித்தார்.
“சீனாவைத் தவிர்த்து மலேசியாவில் மட்டுமே சீன மொழிக் கல்வி தேசிய திட்டத்தோடு இணைத்து கற்பிக்கப்படுகிறது. ஆனால், பல தரப்பினர், இவ்விஷயத்தை நன்றியுடன் நினைத்துப் பார்த்ததில்லை” என பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே தாய்மொழி பள்ளியான சீனப்பள்ளிகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து அமைச்சரவை ஆராய்ந்து வருவதையும் பிரதமர் அந்நேர்க்காணலின் போது சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், கல்வியமைச்சின் துணையமைச்சர் டாக்டர் புவாட் சர்காசி, தகுதிப்பெற்ற, மாண்டரின் மொழி பேசத் தெரிந்த ஆசிரியர்கள் மட்டுமே சீன பள்ளிக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படவேண்டும் என நெருக்குதல் அளித்து வந்த சீனப்பள்ளி ஆசிரியர்களை “இனவாதிகள்” என அடையாளப்படுத்தியிருந்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர், கல்வியமைச்சு வேண்டுமென்றே மாண்டரின் மொழி பேசத்தெரிந்த ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, சீனப்பள்ளிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டி வருவதாக குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக டொங் சொங் எனப்படும் மலேசிய சீனப்பள்ளிகளின் சம்மேளனம் மகஜர் ஒன்றை பிரதமரிடம் சமர்ப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக