பக்கங்கள்

புதன், 17 அக்டோபர், 2012

வீடமைப்பாளர்கள் முதியவர் நடவடிக்கை மையத்தையும் அமைக்க வேண்டும்-பிரதமர்



வீடமைப்பாளர்கள் முதியவர் நடவடிக்கை மையத்தையும் அமைக்க வேண்டும்-பிரதமர்

ஸ்ரீ கெம்பாங்கான், அக்டோபர் 17-  வீடமைப்பு மேம்பாட்டாளர்கள்,
தாங்கள் கட்டும் வீடமைப்புப் பகுதிகளில் முதியோர் நடவடிக்கை மையத்தையும் அமைக்க வேண்டும். இதன்மூலம், முதியவர்கள் சமுதாயத்தோடும் தங்களின் சக வயதினரோடும் இணைந்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.
தற்போது, நாடு தழுவிய நிலையில் மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய மேம்பாட்டு அமைச்சு நாடு தழுவிய அளவில் அமைத்துள்ள 45 முதியோர் நடவடிக்கை மையங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அரசாங்கம் முதியவர்களுக்காக பல உதவித் திட்டங்களை வழங்கினாலும், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வழங்கும் உதவிதான் மிகவும் அவசியமாகிறது என பிரதமர் நினைவுறுத்தினார்.
“முதியவர்களுக்கு உதவும் கடமை அரசாங்கத்திடம் மட்டும் இருக்க வேண்டியது அல்ல. மாறாக, பிள்ளைகளும் தங்களின் கடமையை உணர்ந்து வயதில் முதிர்ந்த பெற்றோர்களைப் பராமரிப்பதில் முன்வரவேண்டும்” என பிரதமர் கூறினார்.
இன்று ஸ்ரீ கெம்பாங்கானில் நடைபெற்ற தேசிய அளவிலான முதியோர் தினக் கொண்டாட்டத்தில் பேசிய டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இவ்வாறு பேசினார். 

vanakkammalaysia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக