பக்கங்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

பங்களா வீட்டின் உரிமையாளர் சீரமைப்புக்கு மாநகர மன்ற அனுமதி பெறவில்லை



பங்களா வீட்டின் உரிமையாளர் சீரமைப்புக்கு மாநகர மன்ற அனுமதி பெறவில்லை

ஷா ஆலம், அக்டோபர் 19- நேற்று மாலை, சீரமைப்புப்
பணிக்குட்படுத்தப்பட்டிருந்த பங்களா வீட்டின், கான்கிரிட் கூரை சரிந்து விழுந்ததில் இரு இந்தோனேசிய தொழிலாளர்கள் பலியானவேளையில், 4 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  தீவிர விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த பங்களா வீட்டின் உரிமையாளர், சீரமைப்புப் பணிக்கான மாநகர மன்ற அனுமதியைப் பெற்றிருக்காதது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த பங்களா உரிமையாளர், தனது பங்களாவை சீரமைப்பு செய்து, விரிவாக்கம் செய்வதற்கு ஷா ஆலம் மாநகர மன்றத்திற்கு (MBSA) எந்தவொரு விண்ணப்பதையும் அனுப்பவில்லை, என MBSA-வின் மேயர் டத்தோ முகமது ஜாஃபார் முகமது அதான் தெரிவித்தார்.
செக்சன் 70 (1), 1974-ஆம் ஆண்டு சாலை மற்றும் நீர்பாசனத்துறை சட்டத்தின் படி, எந்த ஒரு தனிநபரும் தங்களுக்குச் சொந்தமான கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்கு முன்னர் உள்ளாட்சி பிரிவிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட இடத்தில் மொத்தம் 4 பங்களாக்கள் விரிவாக்கம் செய்வதற்காக சீரமைக்கப்பட்டு வருகிறது. அவற்றுள் இரண்டு பங்களாக்கள் மட்டுமே சட்டப்பூர்வமான அனுமதி பெற்றுள்ளதாக முகமது ஜாஃபார் மேலும் கூறினார்.
நேற்று மாலை 4.20 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 6 அந்நிய நாட்டுத் தொழிலாளர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான வேளையில், மற்றொருவரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இரவு 9 மணிக்கு அதிகமான ரத்தம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் படுகாயமடைந்த நான்கு தொழிலாளர்களும் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


vanakkammalaysia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக