கிள்ளான், அக்டோபர் 9-
பெற்ற தந்தையையே கட்டையால் அடித்துக் கொன்ற ஆடவர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். கடந்த
மாத இறுதியில் கிள்ளான் துறைமுக
பகுதியில் ஒரு குத்தகையாளரான தமது தந்தையான எஸ்.துரைசாமி (வயது 58) என்பவரை அவரது
மகனான 22 வயது முத்தமிழ் என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்தார்.
கடந்த செப்டம்பர் 29-ஆம்
தேதி காலை 6.20 மணியளவில், எண்.3, லோரோங் சுங்கை சாமா காகா 18சி, தாமான் தெலுக்
காடோங் இண்ட்ரா என்ற முகவரியைல் கொண்ட வீட்டில் து. முத்தமிழ் தமது தந்தையின்
தலையில் மரக்கட்டையால் பலமாக அடித்து மரணம் விளைவித்ததற்காகக்
குற்றம்சாட்டப்பட்டார்.
தமது தந்தையுடன் வேலை
செய்து வந்த து. முத்தமிழின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு செக்சன் 302
சட்டத்தின் படி கட்டாய மரணதண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமக்கு எதிரான
குற்றஞ்சாட்டை நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் வாசித்தபோது, து.முத்தமிழ் அதனை
புரிந்துக்கொண்டதற்கான அடையாளமாக தலையசைத்து ஆமோதித்தார்.
இதனிடையே, பிரேத
பரிசோதனை முடிவு வெளிவரும் வரை, இவ்வழக்கு எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி வரை
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
vanakkammalaysia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக